யாழ். அனலைதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி 85 கட்ஷன் வீதியை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சண்முகம் தம்பு அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
பாசமிகு தந்தையே!
பார்புகழ் போற்ற
பக்குவமாய் எங்களை வளர்த்த பண்பாளரே
நேசத்தின் இருப்பிடமே
எங்கள் நெஞ்சம் எல்லாம் நிறைந்திருப்பவரே!
கண் முன்னே வாழ்ந்த காலம் கனவாகிப் போனாலும்
எங்கள் முன்னே
உங்கள் முகம் உயிர் வாழும் ஐயா.
இறைவனில்லா கோயிலாக பிறையில்லா வானமாக!
திசையறியாது திகைக்கின்றதைய்யா
உங்கள் குடும்பம்
வருடம் ஒன்று வந்துவிட்ட போதிலும்
நம்ம மறுக்கின்றது எங்கள் மனங்கள்
மறுபடியும் உங்களைப் பார்க்க
மாட்டோம்மா
என ஏங்கித் தவிக்கின்றோம் ஐயா!
ஓயாது உங்கள் நினைவுகள்
வந்து வந்து எதிர்கொள்ள
ஒவ்வொரு கனமும்
துடிதுடித்து உயிரொடு வாழ்கின்றோம் ஐயா
அம்மாவின் பிரிவு தனைத் தாங்காது
அவரோடு நீங்களும் சென்றதுதான் ஏனோ!
தீராத துயரத்திலும் தெய்வமான
உங்கள் ஆத்மசாந்திக்காக
வேண்டிப்
இறைவனை பிரார்த்திக்கின்றோம்!