யாழ். வேலணை கிழக்கு ஆலம்புலத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 10ம் வட்டாரத்தை வாழ்விடமாகவும், சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சண்முகம் சீவரெட்ணம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
என்னுள்ளம் நிறைந்தவரே
என்னுயிரில் கலந்தவரே
உன்பிரிவு எனை என்றும்
வாட்டி இங்கு வதைக்குதய்யா
உன்னைப்போல் ஒரு துணைதான்
உலகில் யாருக்கும் கிடைத்ததில்லை
என்னைப்போல் மாபாவி ஏன் பிறந்தேன்
என நினைத்து நாளும்
இங்கு வாடுகின்றேன்
யாரறிவார் என்துயரை
பார்க்கும் இடம் எல்லாமே
உன் பாசமுகம் தோன்றுதய்யா
உண்ண வென்று உட்கார்ந்தால்
உணவெனக்கு வெறுக்குதய்யா
உறங்க என்னால் முடியவில்லை
உன் நினைவு வந்து எழுப்புதய்யா
கண்ணின் மணியாகி என் கருமணிக்குள் ஒளியாகி
விண்ணகம் நீ சென்றாலும்
என் வேதனையை அறிந்திருப்பாய்
தனிமை எனைவாட்ட
நான் தள்ளாடி வாழுகின்றேன்
ஆலமரம் போல அப்பா
உங்கள் அடி நிழலில் நாமிருந்தோம்
வேறறுந்த மரமாகி
இங்கு வேதனைகள் பட்டு நின்றோம்
சந்தோஷம் போனதனால் எம் தேகம்
துடித்தழுதோம் பத்தாண்டு சென்றதுவோ
பதறி மனம் துடிக்குதய்யா
பாராண்ட மன்னர்களும் பிடி சாம்பலாவதுண்டு
ஆனாலும் உன்பிரிவை தாங்க
எம்மால் முடியவில்லை
அம்மாவுடன் சேர்ந்திங்கு அல்லல்
தான் வாழ்வென்று நாமுணர்ந்து
நொந்து நின்றோம் ஆனாலும்
உன் ஆத்ம சாந்தியினை வேண்டி இங்கு
அந்த ஆண்டவனை நாம்பணிந்து அஞ்சலித்தோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
உன்பிரிவால் என்றும் மீளாத் துயரில் ஆழ்ந்திருக்கும்
அன்பு மனைவி திருமதி. பங்கயற்செல்வி சீவரெட்ணம்
பிள்ளைகள் சுயா, சோபிகா, மருமகன் விஜிதன்
பேத்தி ஐஸ்னா