யாழ். வேலணை மேற்கு சிற்பனையைப் பிறப்பிடமாகவும், நல்லூர் செட்டித்தெரு ஒழுங்கை வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகம் மகாலட்சுமி அவர்கள் 22-06-2019 சனிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா பாக்கியலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லையா கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சண்முகம் அவர்களின் அன்பு மனைவியும்,
சாந்தினி(இலங்கை), சகுந்தலா(கனடா), உஷாராணி(கனடா), விஜயகுமார்(சுவிஸ்), உதயகுமார்(கனடா), விஜிதா(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சொர்ணகாந்தன்(இலங்கை), ஜெயகாந்தன்(கனடா), ஜெகதீசன்(கனடா), காலஞ்சென்ற ரீனா, ராதிகா(கனடா), முரளிதரன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான இந்திராவதி, இராசலெட்சுமி, அரசரெட்ணம், மல்லிகாதேவி மற்றும் கலைச்செல்வி(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான கனகரெத்தினம், சாரதா, விஸ்வநாதன், சண்முகம்பிள்ளை, கருணைநாயகி, சொர்ணலட்சுமி, சிற்றம்பலம், அருளம்பலம் மற்றும் சோமசுந்தரம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சஜீவனி, துளசிகன், டிலக்சி, வினோஜன், மதுரிகா, அனோஜன், சுஜிதா, அபிசன், வினேஷ், நாநியா, தனிஷ், வினுஷ்கா, அஸ்விகா, அனிஷ்கா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-06-2019 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.