Clicky

4ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 10 JAN 1956
இறப்பு 16 MAR 2016
அமரர் சண்முகம் மகேஸ்வரநாதன் (Italy Uncle)
வயது 60
அமரர் சண்முகம் மகேஸ்வரநாதன் 1956 - 2016 நயினாதீவு, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நயினாதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இத்தாலி, வவுனியா பண்டாரிக்குளம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சண்முகம் மகேஸ்வரநாதன் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.

எம் இதயத்து திருவிளக்கே
நான்கு ஆண்டுகள் கடக்கின்றது- ஆனால்
நான்கு நாட்கள் போல் தெரிகின்றதே!
வருடங்கள் உருண்டாலும்
வலியின் வாசம் மட்டும்
விழிக்கருவில் வடுபோல்
விலகாமல் என்றென்றும் உள்ளதே!

காலமெல்லாம் கண்ணீரில்
மிதக்க விட்டு மறந்து போனதேனோ?
நீ பிறந்ததும், எம்மோடு வளர்ந்ததும்
கனவாகிப் போனதே
வாழ்ந்தவையாவும் நினைவாகி
நீ மறைந்தது மட்டும்
கனவாக இருக்கக் கூடாதா?
என்று உன்னையே
எண்ணித் தவிக்கின்றோம்!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...

அன்னாரின் நினைவாக 02-04-2020 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் ஆத்மசாந்திப் பிரார்த்தனை நடைபெறும்.

தகவல்: குடும்பத்தினர்