
யாழ். நெடுந்தீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா நெளுக்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட சண்முகம் கணேசதாசன் அவர்கள் 25-04-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகம்(அதிபர்) முத்துப்பிள்ளை(ஆசிரியர்) தம்பதிகளின் பாசமிகு ஏக புதல்வரும், காலஞ்சென்றவர்களான பொண்ணம்பலம்(பதிவாளர்) பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செல்வமணி(ஓய்வுதிய திட்டமிடல் முகாமைத்துவ உதவியாளர், வவுனியா) அவர்களின் அன்புக் கணவரும்,
சாமினி(கனடா), உஷாநந்தினி(கனடா), திரிபுரகார்த்திகா(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கிரிதரநாதன்(கண்ணன்- கனடா), சதீஸ்குமார்(கனடா), கார்த்தீபன்(ஆசிரியர்- இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சர்வாதாரணி(கனடா) அவர்களின் அன்புச் சகோதரரும்,
துஸ்யந்தினி(கனடா) அவர்களின் அன்பு பெரியப்பாவும்,
இரா.ஜெயசீலன்(கனடா) அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும்,
ஹன்சியா, அபூர்வன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதி ஆராதனை 29-04-2019 திங்கட்கிழமை மு.ப 11:00 மணியளவில் நெடுந்தீவு தென்னிந்திய திருச்சபையில் நடைபெற்று பின்னர் நெடுந்தீவு கிழக்கில் உள்ள சேமக்காலையில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
My deepest condolences on your loss and may his good soul rest in peace.