யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், காரைநகர் பலகாட்டை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Louvres, லண்டன் Dunstable ஆகிய இடங்களை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சண்முகம் பாலசிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 14-06-2023
ஆண்டு ஒன்று சென்றாலும்
உங்களை இழந்த துன்பமும் துயரமும்
எங்கள் மனதை விட்டு மறையவில்லையே!!
இதயத்தில் இரக்கம் கொண்டவனே
எம்மை விட்டு சென்றதும் ஏனோ?
புன்னகை பூத்த பொன்முகமும்- மறைந்தது ஏனோ
பிரிக்க முடியாத சொந்தமும்
மறக்க முடியாத பந்தமும்
தவிர்க்க முடியாத உயிரும்
எல்லாமே உங்கள் அன்பு மட்டுமே!
பூங்காவாய் நீரே இருந்தீர்
பறவையாய்ப் பறந்துவிட்டீர்
பூக்களெல்லாம் வாடிவிட்டோம்
பூமுகத்தை தேடுகின்றோம்.
உதிர்ந்து நீங்கள் போனாலும்
உருக்கும் உம் நினைவுகள் - எம்
உள்ளத்தில்
என்றென்றும் உறைந்திருக்கும்
அப்பா
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
Sorry to hear that. Our heartfelt condolences to your family.