Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 29 FEB 1952
இறப்பு 01 APR 2026
அமரர் சண்முகலிங்கம் நாகேஸ்வரி
வயது 74
அமரர் சண்முகலிங்கம் நாகேஸ்வரி 1952 - 2026 கரந்தன், Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். கரந்தன் நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், வவுனியா தோணிக்கல்லை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சண்முகலிங்கம் நாகேஸ்வரி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

31 நாட்கள் கடந்ததம்மா
 மாண்டுபோன உங்கள் நினைவால்
 மீண்டுவர முடியாமல் தவிக்கிறோம்...
 காலம் கடந்து காலனவன் எமை
 அழைக்கும்வரை கண்ணீரோடு
 காத்திருப்போம் உனைக் காணும் வரை
உன் நினைவு சுமந்த
 வலிகளைத் தாங்கி வழிகளைத்  
தேடித் தொடரும்இந்த சுகமான வாழ்க்கைப்
 பயணத்தில் எமக்கு வழிகாட்டி
 வல்லமை தாரும் எம் தாயே!
 எம் உள்ளத்தில் கருணையுள்ள
 கடவுளாய் வாழ்வீர்கள்...உங்கள் ஆத்மா சாந்திபெற
  இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் அந்தியேட்டிக் கிரியைகள் 01-05-2026 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்திலும் நடைபெறும். அத்தருணம் தாங்களும் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

இங்ஙனம், பிள்ளைகளாகிய ஜனகன், சுரேன், அனுஷா. மருமக்களாகிய வெண்ணிலா(நிலா) கஜேந்தி, தபேசன். பேரப்பிள்ளைகள் ஆகிய மாறன், குமணன், இஷா, சாரா, சுரஜித், ஆகன்ஜன், டிலுஷன், தஸ்மிதா.
Tribute 0 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute