
யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு, இந்தியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செசீலியா அகஸ்ரின் அவர்கள் 16-11-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுவாம்பிள்ளை சவிராசி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மரியாம்பிள்ளை றோசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தொம்மைப்பிள்ளை அகஸ்ரின் அவர்களின் அன்பு மனைவியும்,
றெஜீனாமலர்(சறோசா- கனடா), அருள்சீலன்(இந்தியா), சகாயராணி(இந்தியா), உதயமலர்(இந்தியா), உதயசீலன்(டக்லஸ்- அவுஸ்திரேலியா) ஆகியோரின் அருமைத் தாயாரும்,
காலஞ்சென்ற இரட்னம், அன்னக்கிளி, சிவலிங்கம், விஜயகுமார், கௌரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான தீயோப்பிள்ளை, மார்க்கிறேற், சின்னத்தங்கம், லீனப்பு, மிக்கேல், இராயப்பு ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
வசந்தா, மஞ்சுளா, நிர்மலா, பிரமிளா, சிவறாஜ்குமார், பிரசாந்தி, விஜி, டினேஸ், அனிதா, சாந்தகுமார், சசிகுமார், றாஜ்குமார், றாஜி, றூபா, யாஸ், யாழினி, யதுஷன், யனுஷன் ஆகியோரின் பாசமுள்ள பேத்தியும்,
ஜெரேன், ஜென்சிகா, றெஜினோல்ட், சஞ்சிகா, அஸ்மிகா, நிரூசன், நிரோன், ஜொஷானி, ஜொவான்னா, சிறாணி, ஜெனூஸ், சிப்பிரியான், மதுரினிஷா, அயிஷா, சார்ல்ஸ், சுவான், சர்ச்சனா, டக்சிகா, டெபிசிகா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.