யாழ். அராலி கிழக்கைப் பிறப்பிடமாகவும், வட்டுக்கோட்டையை வசிப்பிடமாகவும், கொழும்பு தெகிவளையை நிரந்தர வதிவிடமாகவும் கொண்டிருந்த செந்தூரன் யாதவகிருஷ்ணன் கிருஷ்ணன் அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் மறைவுச் செய்தி கேட்டு நேரில் வந்தவர்களுக்கும், குறுஞ்செய்தி, தொலைபேசி, முகநூல் ஆகியவற்றின் மூலம் எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள் சாத்தியவர்களுக்கும் மற்றும் எமக்கு சகல வழிகளிலும் உதவி செய்த அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
செந்தூரா!
எத்தனை தசாப்தங்களானாலும்
மூச்சுள்ள வரை
உயிர் புதைந்த சோகம் எம்முள்!
உன் கனவுகளைப் புதைத்து
மண்ணுக்குள் மறைந்து
முப்பது பொழுதுகள் இன்றுடன்!
செய்தி கேட்டு நாம் அழுதது
பொய்யாகாதோ என வேண்டியது-
பாசத்தின் தீ அங்கு ஓய்ந்து கிடந்தது உண்மையே!
விடியலுக்கான கீதமொன்று
இரவு நேர பூபாளமாக
சேர்ந்திருந்த பொழுதுகள் தொலை தூரக் கனவுகளாக
வானவில் வாழ்க்கை கைக் கெட்டாக் கனியாக
உறைந்தது எமக்கு – நீ
இங்கு இல்லை என்பது!
என்றும் உன் நினைவுகளுடன்
பாசமிகு சகோதரிகள்...
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details