யாழ். நெல்லியடியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Croydonனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செந்திவடிவேல் நந்தகுமார் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் உறைவிடமாகவும்
பாசத்தின் சிகரமாகவும்
வாழ்ந்த எம் அன்புத் தெய்வமே
எங்கள் குலதெய்வமே.!
ஆண்டு ஐந்து கரைந்தோடிய போதும்
உம் நினைவு எம்மைவிட்டு அகலவில்லை
உன்னை இழந்து ஆண்டுகள் ஐந்து ஆனாலும்
உந்தன் அன்பு முகமும் நேசப் புன்னகையும்
மறையவில்லை!
அப்பா என்றழைக்க நாம் தேடி வரும் வேளையில்
நீங்கள் விண்மீனாய் தொலைதூரம் போனதேனோ?
ஆயிரம் உறவுகள் அரவணைக்க இருந்தாலும்
அப்பா உன் அன்புக்கு ஈடாகுமோ...
எங்களை தவிக்க விட்டு
நீர் தூரமாய் சென்றதென்ன?
எங்கள் முகம் காண
வருவாயா ஓர் கணமே?
நொடிப் பொழுதில் - எமை
வருந்த விட்டுச் சென்றுவிட்டீர்!
வருடங்கள் நீளலாம் - ஆனால்
உன் நினைவுகள் என்றும் நீங்காது!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
பிரார்த்திக்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
ஆத்மசாந்தி அடைய துயருறும் குடும்பத்தாருக்கு ஆறுதல் அடைய இறையருள் வேண்டுகிறேன்?