Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சேனாதிராசா இரத்தினராசா, சேனாதிராசா ஸ்ரீஸ்கந்தராஜா
திதி (02-01-2025)
இறப்பு - 13 JAN 2024
அமரர் சேனாதிராசா இரத்தினராசா, சேனாதிராசா ஸ்ரீஸ்கந்தராஜா 2024 வேலணை 1ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

அமரர் சேனாதிராசா இரத்தினராசா
தோற்றம் : 10 Jun, 1954 மறைவு : 19 Jun, 2023

யாழ். வேலணை 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்டிருந்த சேனாதிராசா இரத்தினராசா(காலி நியூ கொழும்பு ஸ்ரோர்ஸ்- உரிமையாளர்) அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்கள் குடும்ப சொத்தை தொலைத்து
நாட்கள் உருண்டோடி ஓராண்டு காலம்
ஆனாலும் நீங்கள் எங்கள் நெஞ்சங்களில்
எப்போதும் வாழ்ந்து கொண்டேயிருப்பீர்கள்!

நாங்கள் எங்கு சென்றாலும் நீங்கள்
நிழலாய் பயணிக்கும் அந்த
உணர்வுதான் எங்களை இதுவரை
காலமாய் இவ்வுலகில் வைத்துள்ளது!

இந்த ஒரு வருடம் ஏழேழு ஜென்மம்
மாதிரி இந்த பிரிவு எங்கள் வாழ்க்கையில்
நீங்கா வடு அன்பான மகனாய்,
பாசமான கணவராய், ஆசைப்பட்டதெல்லாம்
வாங்கித்தந்த அப்பாவாக, கொஞ்சி பேசும்
அம்மப்பாவாக, ஆசையான பெரிய
அண்ணாவாக ஊரே மெய்க்கும் அளவுக்கு
தலைசிறந்த மனிதனாக வாழும்போது
யாரிடமும் சொல்லாமல் எங்கு சென்றீர்கள்

நாங்கள் இவ்வுலகில் ஊனமாய்
உலாவுகிறோம் எங்கள் அழுகுரல்
கேட்கிறதா ஒவ்வொரு வினாடியும்
ஏங்குகிறோம் ஒரு முறையாவது உங்கள்
முகம் பார்க்க தவிக்கிறோம் உங்கள்
குரல் கேட்க துடிக்கிறோம்
ஒரு நிமிடம் கூட உங்களை
நினைக்காத நாளே இல்லை அப்பா!

அமரர் சேனாதிராசா ஸ்ரீஸ்கந்தராஜா (காந்தி)
பிறப்பு : 25 Jan, 1956  இறப்பு : 13 Jan, 2024

யாழ். வேலணை 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் St.Gallen ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சேனாதிராசா ஸ்ரீஸ்கந்தராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

நீர் விழி தோய!
நீங்கா நினைவுகள் மிளிர
உங்களை பிரிந்து ஆண்டு
ஒன்று ஆனதே அப்பா!

ஆறாத் துயரம் எம் தொண்டை
அடைக்க மீளாத்துயில் கொண்ட
தந்தை உங்கள் முகம் காண
முடியாமல் நிழல் முகம் கண்டு
நித்தம் கண்ணீர் மல்கி வாடுகின்றோம்!

ஆறாத காயமாக உங்கள் மாய
மறைவு எம் மனதை வதைக்க
மீளாத்துயருடன் உறவுகள் நாம்
உங்களை எண்ணி ஏங்குகின்றோம்!

மீண்டும் மீண்டும் உங்கள்
பிரிவினை சொல்லும் பல
நினைவுகள் எமை வாட்டிட
ஆண்டு ஒன்றில் உங்களை
அஞ்சலி செய்து ஆராதிக்கின்றோம்!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices