

யாழ். கோப்பாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட செல்வேஸ்வரி செல்வரட்ணம் அவர்கள் 29-03-2025 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நவரத்தினம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான காசிநாதர் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற காசிநாதர் செல்வரட்ணம்(ஓய்வுபெற்ற பொதுச் சுகாதார பரிசோதகர், மட்டக்களப்பு) அவர்களின் அன்பு மனைவியும்,
செல்வரத்தினம்(கனடா), செல்வராணி(கண்டி), காலஞ்சென்ற விஜயமலர், கனகரத்தினம்(கொக்குவில்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கருணாவதி, ஜெயராஜசிங்கம், சற்குணசிங்கம், வசந்தாதேவி, காலஞ்சென்றவர்களான பொன்னையா, நல்லம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
Dr. செல்வரஞ்சன்(ஐக்கிய அமெரிக்கா), செல்வராஜினி(கனடா), செல்வரதி(நோர்வே), செல்வமாலா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ரதினி, தயாபரன், ஹரிஷங்கர் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஸ்வாத்மிகா, மயூரா, திவ்வியா, ரொஷான், ஷைலா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 31-03-2025 திங்கட்கிழமை அன்று மு.ப 10.00 மணி முதல் கல்கிஸை மஹிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பி.ப. 01.00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று அதனைத் தொடர்ந்து பி.ப 03.00 மணியளவில் கல்கிஸை பொதுமயானத்தில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +94769724580
- Phone : +94114946284
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
Our deepest condolences. Forever in our hearts Mami! With love Suseela, Arunan, Meera, Geetha, and Jeeva
எமது ஆழ்ந்த அனுதாபங்கள்🙏 அண்ணி/மாமியின் ஆத்மா சந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்🙏 🌹 ஓம் சாந்தி, சாந்தி, சாந்தி🙏🙏🙏