Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
அன்னை மடியில் 14 AUG 1971
ஆண்டவன் அடியில் 23 MAR 2024
அமரர் செல்வரட்ணம் வரதராஜா
வயது 52
அமரர் செல்வரட்ணம் வரதராஜா 1971 - 2024 காரைநகர் புதுறோடு, Sri Lanka Sri Lanka
Tribute 11 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். காரைநகர் புதுறோடு எஸ் எம் கேணியடியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் வெம்பிளியை வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்வரட்ணம் வரதராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 11-04-2025

 அன்பை விதைத்த அப்பாவே
அறுவடை செய்ய ஏன் மறந்தாய்?
பண்பு பாசத்தை பகிர்ந்துவிட்டு
பலனை பார்க்காமல் ஏன் பிரிந்தாய்?

வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
வானடைந்து ஓராண்டு ஆனாலும்
ஆறாது உங்கள் பிரிவுத்துயர் என்றும்!!!

கலையாத உங்கள் முகமும்
கள்ளமில்லா உங்கள் சிரிப்பும்
அப்பா இனி காண்பது எப்போது?

ஆயிரம் ஆயிரம் உறவுகள் இருந்தாலும்
அப்பா என்றழைக்க நீங்கள்
எமது அருகில் இல்லையே!

இன்றும் எம்மை நிழல் போலத்
தொடர்ந்து வரும் அன்பே!
உணர்வோடு கலந்த உயிர்மூச்சை
உள்ளடக்கி கண்ணீரை
காணிக்கையாக்குகின்றோம் அப்பா!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்..!

தகவல்: மனைவி, பிள்ளைகள்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Fri, 29 Mar, 2024