Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 04 JUL 1933
இறப்பு 01 APR 2021
அமரர் செல்வரத்தினம் சிவன்நேசன்
இளைப்பாறிய மின் பொறியியலாளர்- இலங்கை மின்சார சபை, கூல் ஏயார்
வயது 87
அமரர் செல்வரத்தினம் சிவன்நேசன் 1933 - 2021 உரும்பிராய், Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், நிம்மதி தேவாலய வீதி சங்கானையை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட செல்வரத்தினம் சிவன்நேசன் அவர்களின் நன்றி நவிலல்.

இன்றோடு முப்பத்தொரு நாட்கள் கடந்தாலும்
உங்கள் முகம் எங்கள் மனதில்
என்றும் மறந்ததில்லை...

அன்பின் உருவே அழியாத ஓவியமே.!
நாட்கள் கடந்தாலும்
ஆறாத உங்கள் பிரிவு
ஆறாய் ஓடுகின்றது
தினம் தினம் எங்களின் கண்களில்!!

உங்கள் பாதக் கமலத்தில்
மலர்தூவி வணங்குகின்றோம்!!
அங்கிருந்து எங்களை வாழ்த்துவீர்கள்
என்ற நம்பிக்கையுடன் வாழ்கின்றோம்!!

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 2 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.