வாழ வேண்டாதார் வாழுதலும், வாழ வேண்டியவர் சாதலும் இயல்பாகிய உலகில் தாயே உனதிந்த இழப்பு எம்மை வாட்டுகின்றது மறக்க முடியாத இறப்பு, என்னுள் கனிந்த நல்லதோர் அன்பே உனதிழப்பு எமக்கு பேரிழப்பே ஆகும் மரணத்தை சந்திக்கத் தயாராக இருந்த தாயே நீ கேட்டதிற்கிணங்க உனது கடைசி ஆசையை என் பேனாத் துளிகள் இன்று கண்ணீர்துளிகளால் நிரப்புகிறது குழந்தையின் சிரிப்பிலும் முதுமையின் ஏக்கத்திலும் இறைவன் இருக்கிறான் இதை உணர்ந்து முதுமை மனிதன் எல்லோரையும் தன் பெற்றோர் என்று அன்பு காட்டுபவனாய் உனதன்பால் ஈர்கப்பட்டே தாயே உன்னை வழியனுப்ப நான் இங்கு வந்தேன் இறந்த உடல் பேசுவதில்லை ஆனாலும் இந்த வாசகம் உன்னுடன் என்னை ஏனோ பேசவைப்பதாய் உணர்கிறது இறந்த உடல் எதையும் உணர்வதில்லை.. ஆனாலும் இவ்வாசகம் ஏனோ நீ கேட்டதை பூர்த்தி செய்வதாய் உணர்கிறது ஜென்மம் ஏழு இனி நான் எடுத்தாலும் சேயை போல எனைப் பார்க்கின்றாள் தாரா என்பாயே என்னை தாங்க அவளைப்போல் ஓர் தாயை நானும் காண்பேனோ என்பாயே இன்று அவளைத் தனியே விட்டுச் செல்ல உன்னால் எப்படி முடிந்தது தாயே உனது இறுதியாத்திரை இங்குதான் நிகழ வேண்டும் சங்கானை மண்ணின் சொந்தங்கள் உடனேயே நீ கடைவழி செல்லவேண்டும் என்பாயே உந்தன் உறுதி மிக்க வாக்கியங்கள் இன்று உணர்வோடு உயிர்க்கிறது நீரில் மிதந்திடும் கண்களே நிம்மதி பெறுங்கள் நேசம்வைத்தவர் இன்று நம்முடன் இல்லை மதிகொண்ட நாம் இனி அவரை நினைவினில் கொள்வோம் ...! விதையொன்று வீழ்ந்திடில் முளைவிடும் செடிபோல் மரணத்தின் விதைதான் திரும்பவும் ஜனனத்தில் துளிர்க்கும் மாசற்ற இந்தத் தாயாருக்கு அஞ்சலிக்க பாட்டெழுதி பூசிக்க பூவென்று சொல்லெடுத்து புனிதமுற பொலிகின்றேன் ...! அன்னாரின் ஆத்மா சாந்தி பெற எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகிறோம் ...! இறுதி மரியாதை தர இந்த இல்லம் நோக்கி வந்தோருக்கு இம்மியளவு இதயம் கனத்தால் இவ்வுலகில் பிறந்ததற்கு உதாரணமாய் இருக்க இயன்றவரை முயன்றிடுவோம்..
Our heartfelt condolences to Praba and all the family members. May her soul Rest in peace 🙏.