Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 26 DEC 1958
இறப்பு 20 NOV 2016
அமரர் செல்வராணி தர்மரத்தினம் (குஞ்சு)
வயது 57
அமரர் செல்வராணி தர்மரத்தினம் 1958 - 2016 வேலணை கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வேலணை கிழக்கு மணியகாரன் வீட்டடியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி இராமநாதபுரம், கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த  செல்வராணி தர்மரத்தினம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

மூன்று ஆண்டுகள் கடக்கிறது ஆனால்,
மூன்று நாட்கள் போல் தெரிகிறது உம் நினைவு!
ஆயிரம் உறவுகள் இருந்தாலும் - உங்கள்
உறவுக்கு நிகரில்லை யாருமே!

அம்மா உரிமைகொள்ள ஆயிரம்
உறவுகள் இருந்தாலும் உள்ளத்தை புரிந்து
கொள்ள எம் தாய் போல் எவரும்
இல்லை எம் அருகினில்.. 

நீ தந்த சந்தோஷ தருணங்களிற்கு
வேறு எந்த உவமையும் இணையாய்
எங்களுக்கு விளைந்து போகாது 

நீ இல்லாத உலகம் இருள் சூழ்ந்த
முழு வெறுமையை அன்றி வேறெதையும்
தந்து போகாது
ஆண்டுகள் எத்தனை போனாலும்
நீ எம்மோடு பேசிய கதைகள்
நம் நெஞ்சை விட்டு அகன்று போகாது 

உன் நினைவுகள் தரும் கண்ணீர்
இவ்வுலகில் நாம் வாழும் வரைவற்றிப் போகாது

எத்தனை ஜென்மம் இருந்தாலும்
மறுபடியும் தாயாக நீங்கள்
வரவேண்டும் அம்மா!!!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டுகின்றோம்...

ஓம் சாந்தி! ஓம்சாந்தி!! ஓம்சாந்தி!!!

தகவல்: குடும்பத்தினர்