Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 08 MAR 1951
மறைவு 20 SEP 2023
அமரர் செல்வராணி முருகேஷ்வரன்
வயது 72
அமரர் செல்வராணி முருகேஷ்வரன் 1951 - 2023 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் கண்ணகிபுரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்வராணி முருகேஷ்வரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 08-10-2024

அன்பிலே பூத்த எங்கள்
ஆருயிரே அம்மாவே!
ஆசையுடன் ஓடி வந்து
அன்புருக அணைத்தீரே!
இன்பமாக வாழ்ந்த உன்னை
காலன் கொண்டு சென்றனனே!

ஆயிரம் அறிவுரை சொல்லி
அகிலத்தைக் காணவைத்தீர்
சோதனை பல தாண்டி- எம்மை
சொர்க்கத்தின் கரைசேர்த்தீர்
எம் அன்னையே...

வார்த்தைகள் இல்லாத உங்கள்
வடிவம் கண்டோம் அம்மா
வர்ணிக்க முடியாத வார்த்தைகள் கண்டோம் அம்மா
அளவிட முடியாத உங்கள் அன்பு கண்டோம் அம்மா
சுயநலம் இல்லாத இதயம் கண்டோம் அம்மா

ஆனந்தமாய் நாங்கள் வாழ்ந்த போது
அம்மா என்றே இதய கீதம் பாடி
மகிழ்ந்தோம் அம்மா!

நிறைவாக நீ வாழ்ந்து நீள்துயில் கொண்டு
இன்றோடு ஓராண்டு.

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...

தகவல்: குடும்பத்தினர்