யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Basel ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்வராஜா விக்னேஸ்வரி அவர்களின் 11ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்கள் எனைவிட்டுப்போய்
ஆண்டு பதினொன்று ஆனாலும்
உம் நினைவோடு எங்கள் நாட்கள் கரைகிறதே..!
கற்பனை உலகில் நாட்களை நகர்த்தி
ஜடமாய் நகர்கின்றோம்
ஒவ்வொரு நொடியும்..!
கடைசிவரை இருப்பாய் என்று
மறந்து விட்டேன் வாழ்வை அன்று
கடந்து விட்டாய் என்னை விட்டு
என் கனவை உடைத்துவிட்டாய் மரணத்தால்
இமை மூடி தூங்கினாலும்
விடை தேடி அழுகின்றது இதயம்
மனம் மட்டும் மௌனித்து
உன் நிலை தன்னை ஏற்கின்றது
யாரிடம் பகிர்வோம்
இந்த மனம் படும் வேதனையை
நீ இல்லா இவ்வுலகில்
நிம்மதியோ எமக்கில்லை- ஆனாலும்
உன் நினைவுகள் என்றும் எம்முடன் நிரந்தரம் தான்
நீங்காத உன் நினைவுகளையும் சுமந்தபடி
அப்பா, அம்மா, சகோதரர்கள், சகோதரிகள்,
கணவர், பிள்ளைகள்,உறவினர், நண்பர்கள்..!