யாழ். ஏழாலை மயிலங்காட்டைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், தற்போது மீசாலையை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வராஜா தங்கரத்தினம் அவர்கள் 15-09-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற செல்வராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
சதானந்தன் (Germany), செல்வறஜனி (Canada) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஜெயந்தினி (Germany), காலஞ்சென்ற தவேந்திரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான அன்னேஸ்வரி, குமாரசாமி, அருமைநாயகம், சந்திரநாயகம் மற்றும் பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான தியாகராயா, மகேஸ்வரி, பாலசிங்கம், சண்முகநாதன், மகேஸ்வரி மற்றும் வேலாயுதபிள்ளை, திலகவதி, சரோஜினிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கீர்த்திகா, நிவேதிகா, கிர்ஜென், அக்ஷஜன், அனுஜன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அம்மா…
உன் குரல் இன்று அமைதியானது,
ஆனால் எம் மனதில் இன்னும் ஒலிக்கிறது.
உன் அன்பின் நிழல் நீங்காது,
உன் நினைவின் வாசம் மறையாது.
கண்களில் கண்ணீராய் நீ,
இதயத்தில் என்றும் உயிராய் நீ.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.