1ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
11
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்வராசா பாக்கியம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 26-10-2023
நீங்காத நினைவுகள் தந்து
நீண்ட தூரம் சென்று
ஆண்டுகள் பல கடந்தாலும்
ஓயவில்லை உங்களின் நினைவுகள்
அகலவில்லை அம்மாவின் அன்பு முகம்....
என்ன செய்வது எம் மனம் ஏங்குகிறது!
அழுத விழிகளுக்கு ஆறுதல் காட்ட
ஒரு முறையாவது வாங்க அம்மா
உங்கள் முகம் காண..... "
மண்ணிலே வீழ்ந்த மழை மீண்டும்
விண்ணுக்கே செல்லுமென்பார்
விண்ணுக்குச் சென்ற நீங்கள் மீண்டும்
மண்ணுக்கு வரமாட்டீரோ?
எம்கண்ணிலே வழியும் நீரை உங்கள்
கடைக் கண்ணால் பாருங்கள்!
உமை நினைத்தே உருகின்றோம்..
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
அன்னாரின் ஆத்மசாந்தி பூசை 26-10-2023 வியாழக்கிழமை அன்று அவரது நீர்வேலி இல்லத்தில் நடைபெற்றது.
தகவல்:
குடும்பத்தினர்