யாழ். அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட செல்வராஜா குழந்தைவேலு அவர்கள் 24-03-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குழந்தைவேலு சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பூபதியம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
கெங்காதரன், கௌரிமதி, பகீரதன், சுமதி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
றஜனி(கிச்சி), சிவநாதன், ஜெயக்குமாரி(சசி), பாலகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற கணேசபிள்ளை, தவமணி, சச்சிதானந்தம், வீரசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
லச்சுமிபிள்ளை, ராசறட்ணம், கௌரி, சாந்தவதனி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
குமாரவேலு, தங்கம்மா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற சிவகுரு, கண்மணி ஆகியோரின் அன்பு உடன் பிறவாச் சகோதரரும்,
அபிர்தா, விவேக்கா, பிரவீன், சுஜீன், அர்ச்சனா, பிரியங்கா, அஸ்வின், அச்சுதன், யஸ்மிகா, சாருகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது ஆழ்ந்த அனுதாபங்கள், தங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை நாமும் வேண்டுகின்றோம்.