மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, இந்தியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்வநிதி சிவசுந்தரமூர்த்தி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்று ஆனதம்மா
ஆறவில்லை எங்கள் மனம்
ஆயிரம் உறவுகள் அரவணைக்க இருந்தாலும்
அம்மா உங்கள் அன்பிற்கு ஈடாகுமா
அன்பைச் சுமந்து அறிவைச் சுமந்து
நல்ல பண்பைச் சுமந்து
ஈடில்லாப் பாசம் சுமந்து
நீங்கள் எமக்களித்த இன்பமெல்லாம்
நினைத்து முடிக்குமுன்பே
நிர்மூலமானதென்ன?
இனிய குடும்பமாய் இன்பச் சோலையாய்
பதினாறும் பெற்று பவ்வியமாய்
வாழ்கையிலே இடைநடுவே
எம்மைத் தவிக்கவிட்டு ஏனம்மா சென்றீர்கள்?
சிலைபோல் நாமிப்போ சித்தமின்றித் தவிக்கின்றோம்
உன் அன்பின் கதகதப்பும் பாசமான உன்குரலும்
இனி எங்கே காண்போமம்மா?
ஓராண்டென்ன? ஓராயிரம் ஆண்டு சென்றாலும்
எம்மை விட்டு உங்கள் நினைவை அழிக்க முடியாதம்மா
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
உங்கள் பிரிவால் துயருறும் அருமைப் பிள்ளைகள், மருமக்கள், சகோதரர்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்...