Clicky

மரண அறிவித்தல்
அமரர் செல்வநாயகி தற்பரானந்தன் 2020 தெல்லிப்பழை, Sri Lanka Sri Lanka
Tribute 31 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். தெல்லிப்பழையைப்  பிறப்பிடமாகவும், வட்டுக்கோட்டை, கொழும்பு கல்கிசை, அவுஸ்திரேலியா Sydney ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வநாயகி தற்பரானந்தன் அவர்கள் 18-05-2020 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், தெல்லிப்பழையைச் சேர்ந்த முத்தையா சீதாங்கனி தம்பதிகளின் அன்பு மகளும்,

தற்பரானந்தன்(இளைப்பாறிய யாழ்ப்பாணக் கல்லூரி ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற முகுந்தன்(யாழ்ப்பாணக் கல்லூரிப் பழைய மாணவர்) மற்றும் மயூரன்(கணக்காளர்- சிட்னி), சுகந்தன்(KFC- யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பாலகிருஷ்ணன்(கண்டி), காலஞ்சென்ற சிவலிங்கம், சற்குணவதி(பிரித்தானியா), காலஞ்சென்றவர்களான சரவணபவன், மதிவதனி மற்றும் வீரகுலசிங்கம்(ஆசிரிய ஆலோசகர்- விஞ்ஞானம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மாதுரிதேவி(கொமன் வெல்த் வங்கி, சிட்னி), கிரிசாந்தி(தாதிய உத்தியோகத்தர்- யாழ்  போதனா வைத்திய சாலை) ஆகியோரின் அன்பு மாமியும்,

ஆதித்தன், அமுதா, அனுசா(சிட்னி), விஷ்ணுகன்(சண்டிலிப்பாய்) ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 19-05-2020 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் ஐயனார் வீதி, சண்டிலிப்பாய் எனும் முகவரியில் நடைபெற்று பின்னர் நவாலி வழுக்கையாறு மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்