1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் செல்வநாயகி பாலன்
(செல்லம்)
வயது 79
Tribute
6
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். சரவணையைப் பிறப்பிடமாகவும், நவக்கிரி, கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்வநாயகி பாலன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
பண்பின் உறைவிடமாய்
பாசத்தின் திருவுருவாய்
மலர்ந்த எம் அருமைத் தாயே!
எல்லோர் மனதிலும் என்றும்
அணையாத சுடராய் வாழ்ந்து
கொண்டிருக்கின்றீர்கள் அம்மா!
அகவை ஒன்று அகன்றே
நின்றாலும் அழியாத நினைவலைகள்
எம் அகத்தில் நின்று ஆழத்திலே
வாட்டி வதைக்கின்றது அம்மா!
அன்பின் உருவான தாயே எம்
உயிரினுள் உயிராகி உறவிலே
கலந்து ஏற்றமுடன் நாம் வாழ
ஏணியாக இருந்திடுவீர் அம்மா!
எங்கள் அன்புத் தெய்வத்தின்
ஆத்மா சாந்தியடைய எல்லாம்
வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!
தகவல்:
குடும்பத்தினர்
We will miss you ammamma. May your soul rest in peace.