5ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் செல்வநாயகம் பூபதி
வயது 72
Tribute
8
people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். குடத்தனை மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, நெதர்லாந்து ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்வநாயகம் பூபதி அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
அம்மா உங்கள் குரல் கேட்காது
ஐந்து வருடங்கள் ஆகிவிட்டன
அரவணைத்த உங்கள் பாசக் கைகள் எங்கே!!
அள்ளித் தந்த அந்த அமிர்த சுவைகள்
எங்கே முத்தமிட்ட உங்கள் மூச்சு எங்கே
முடிச்சு வைத்த பாசக் கதைகள்
எங்கே அம்மா நாம் கண் திறந்த போது
உங்கள் திருமுகத்தை கண்டு சிரித்தோம்
அன்று உங்கள் கண்கள் திறக்க மறுத்த போது
எங்களை எல்லாம்
கண்ணீர் கடலில் மூழ்க விட்டு
எங்கு சென்றீர்கள் அம்மா ஆயிரம் உறவுகள்
அரவணைக்க இருந்தாலும் அம்மா
உங்கள் அன்பிற்கு ஈடாகுமா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
You are always loved and never forgotten.