Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அன்னை மடியில் 29 MAY 1947
இறைவன் அடியில் 18 MAY 2026
திருமதி செல்வலக்‌ஷ்மி சோதிலிங்கம் (அல்லி)
வயது 78
திருமதி செல்வலக்‌ஷ்மி சோதிலிங்கம் 1947 - 2026 தெல்லிப்பழை, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். வறுத்தலைவிளான் தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்வலக்‌ஷ்மி சோதிலிங்கம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

விண்ணில் நீ நட்சத்திரமாய் 
மின்னினாலும், மண்ணில் என் 
நினைவில் என்றும் வாழ்கிறாய்!

என் மகிழ்ச்சியில் சிரித்தவளே, 
என் துன்பத்தில் கலங்கியவளே, 
அன்பு அம்மாவே!

என்னை விட்டு நீ பிரிந்தாலும், 
உன் பாசம் என்னை வழிநடத்தும்! 
மீண்டும் ஒரு பிறவியில், 
சகோதரியாய் நீ பிறக்க வேண்டி, 
உன் நினைவுகளுடன் நான்!

காலங்கள் ஓடினாலும் 
காயங்கள் ஆறிடுமா? 
தாய்க்குப் பின் தாரம் என்பார்கள்
 ஆனால் எனக்குத் தாயாக இருந்தவள் நீ!

உன் நினைவுகள் சுமந்து - நான் 
வாழும் ஒவ்வொரு நொடியும் 
உன் பாசத்தின் சாட்சிகளே!

பிரிவு என்பது உடலுக்கு மட்டுமே, 
உன்னோடு நான் வாழ்ந்த 
நினைவுகளுக்கு என்றுமே அழிவில்லை. 
நிம்மதியாக உறங்கு தாயே....

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 11 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்