யாழ். காரைநகர் வேதரடைப்பைப் பிறப்பிடமாகவும், கொழும்பு ஆட்டுபட்டி தெருவை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வதுரை சிவசுப்பிரமணியம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
31 நாள் ஆனாலும் ஆறமுடியவில்லை எம்மால்!
உங்களை நாம் இழந்த துயரை ஈடுசெய்ய
இயலாமல் தவிக்கின்றோம்!
அன்று எங்களது துன்பம் நீக்க
குடும்பத்தின் குல விளக்காய்
பாசத்தின் பிறப்பிடமாய் பண்பின் உறைவிடமாய்
வாழ்வின் வழிகாட்டியாய் எம்முடனே!
எமக்காகவே வாழ்ந்த எம் குலக்கொழுந்தே!
எமக்கு பாசத்தைப் பன்மடங்காய்
வாரி வழங்கிய வள்ளல் நீரல்லோ!
இன்று உங்கள் பாசத்திற்காய் ஏங்கவிட்டு
எங்கு சென்று விட்டீர்கள் அப்பா!
உங்கள் பாசம் நிறைந்த முகத்தைப் பார்க்காமலும்
கனிவு நிறைந்த குரலையும் கேட்காமலும்
கடந்த 31 நாட்களாக எல்லோரும் ஏங்கித் தவிக்கின்றோம்
எங்களுடன் நிங்கள் வாழ்ந்த நாட்கள்
மீண்டும் வராதா என்று
தினமும் கண்கலங்கித் தேடுகின்றோம்..
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
அன்னாரின் இறுதிக்கிரியை, வீட்டு கிரியை மற்றும் ஆத்மா சாந்தி பிரார்த்தனையில் பங்கு கொண்டவர்களுக்கு எமது இதய பூர்வமான நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
such a pleasant & gentle soul.so sad he went so soon. May his memories are cherished forever.