3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் செல்லத்துரை சற்குருநாதன்
Formerly MOIC at Oasis Private Hospital, Lady Ridgeway Children’s hospital, and other hospitals in Sri Lanka, UK and Oman, MBBS, DCH
வயது 83
Tribute
29
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடம், ஓமான், கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்லத்துரை சற்குருநாதன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு மூன்று அகன்றோடி மறைந்தாலும்
உங்கள் நினைவு என்றும் மறக்காது
எமக்கு எல்லாமாக இருந்தவரே
இன்று நாம் துடுப்பிளந்த
படகாகித் தவிக்கிறோம்
அப்பா என்று கூப்பிட்டு மூன்று ஆண்டு ஆனதப்பா!
சோறூட்டிய கைகளையும், தூக்கிய தோளையும்
நினைத்து! நினைத்து! வெம்புவது தெரிகிறதாப்பா?
அன்பிற்கே சாவு என்றால் அகிலமே தாங்காதப்பா!
என்னுயிர் அப்பா வந்து விடுங்கோ!
ஏங்கி நாம் தவிக்கின்றோம்.
எம் நெஞ்சிருக்கும் வரை உங்கள்
இனிய நினைவுகளும் நீங்காமல் அடங்கியிருக்கும்
நீங்களும் எங்களை வெறுக்கவில்லை
நாங்களும் உங்களை மறக்கவில்லை
அனுதினமும் நினைத்து நினைத்து
எண்ணித் தவிக்கின்றோம்
தகவல்:
குடும்பத்தினர்
Remembering uncle with gratitude !