Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 22 JUN 1946
இறப்பு 03 JAN 2021
திரு செல்வத்துரை சன்னிதிவேல்
ஆசிரியர்- யாழ். ஸ்ரீசோமஸ்கந்தா கல்லூரி, நெல்லியடி மகா வித்தியாலயம், எத்தியோப்பியா, நைஜீரியா, தொகுப்பாளர்- கனடா தமிழ் கலாச்சார தொழில் நுட்பவியல் கல்லூரி
வயது 74
திரு செல்வத்துரை சன்னிதிவேல் 1946 - 2021 இடைக்காடு, Sri Lanka Sri Lanka
Tribute 44 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். அச்சுவேலி இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், அல்வாய், எத்தியோப்பியா, நைஜீரியா, கனடா ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட செல்வத்துரை சன்னிதிவேல் அவர்கள் 03-01-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்வத்துரை நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும்,  தட்சணாமூர்த்தி  இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

சாமினி அவர்களின் அன்புத் தந்தையும்,

காண்டீபன் அவர்களின் அன்பு மாமாவும்,

சிவேஸ்வரி, சிவமங்களவதி, சிவமலர், நடராசபதி, சிவயோகராணி, சிவமனோகரி, சிவயோகேஸ்வரி, காலஞ்சென்றவர்களான கதிர்காம சுந்தரலிங்கம், சுந்தரவேல், சிவபாக்கியவதி, சிவசோதிமதி  ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இராசரத்தினம், உதயநாயகி, சோதிமுருகேசு, சிவரஞ்சனி, சிறீதரன், சிவபாலன், கணேசலிங்கம், சுகிர்தராணி, சுபாசினி, காலஞ்சென்றவர்களான  பொன்னம்மா, துரைசிங்கம், சிதம்பரநாதன், சண்முகபாரதி ஆகியோரின் மைத்துனரும்,

மனோகரன், அருள்ராஐன் ஆகியோரின் சகலனும்,

யாதவ், விஸ்வா ஆகியோரின் அன்புத்  தாத்தாவும் ஆவார்.

இறுதிக்கிரியைகள் Covid -19 காரணமாக கனேடிய சட்டத்திற்கமைய குறிப்பிட்ட எண்ணிக்கையானவர்களுடன் நடைபெற வேண்டும் என்பதால் இந்நிகழ்வானது குடும்ப உறவுகள் மட்டும் பங்கு பெறும் நிகழ்வாக நடைபெறவுள்ளது. இந்நிகழ்வினை உறவினர்கள், நண்பர்கள் நேரலை மூலம் பார்வையிட முடியும். இதன் விபரம் பின்னர் அறியதரப்படும்.   

தகவல்: குடும்பத்தினர்