Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 24 OCT 1938
இறப்பு 23 JAN 2021
அமரர் செல்லையா விஜயசந்திரன்
Former lecturer - Postal Telecommunication Institute of Management & Law Office Of Nathan Sritharan Toronto Canada
வயது 82
அமரர் செல்லையா விஜயசந்திரன் 1938 - 2021 திருநெல்வேலி, Sri Lanka Sri Lanka
Tribute 247 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும்,  கொழும்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா விஜயசந்திரன் அவர்கள் 23-01-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லையா மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுந்தரராசா, ராசமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சறோஜினிதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,

அரவிந்தன் அவர்களின் பாசமிகு தந்தையும்,

சாமினி அவர்களின் அன்பு மாமனாரும்,

அஷ்வின், சச்சின், கோவிந் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்றவர்களான பாலச்சந்திரன், திலகவதி மற்றும் யோகவதி, சோமவதி, யோகேஸ்வரன், விமலேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சோதிப்பிள்ளை பாலச்சந்திரன், காலஞ்சென்றவர்களான ராஜதுரை, கணேசரட்ணம், பாலசுப்பிரமணியம் மற்றும் கெளரீஸ்வரி விமலேஸ்வரன், வசுந்தரா பேர்ன்ஸ், காலஞ்சென்ற விஜயகுமார், விமலாதேவி சிவலோகநாதன், சிவகுமார், பூமகள் சிவகரன், அஜித்குமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சண்முகராஜா யோகேஸ்வரி தம்பதிகளின் அன்புச் சம்மந்தியும் ஆவார்.

இவர்களுடன் நண்பர்கள், பெறாமகன்மகள், பெறாமக்கள், பேரன்மார், பேத்திமார் மற்றும் எல்லா குடும்பங்களும் ஆழ்ந்த துயரத்தில் முழ்கியுள்ளார்கள்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

குறிப்பு:- பொது சுகாதாரம் ஒன்டாரியோ நிறுவனத்தின் உத்தரவின் பேரில் 20 உற்றார், உறவினர்களே ஒரு மணித்தியாலத்தில் அனுமதிக்கப்படுவர். அதன் பேரில் நாங்கள் அவர்களிடம் இறுதி அஞ்சலி செலுத்த விரும்பும் உங்களின் பெயர், தொலைபேசி இலக்கம் பதிவு செய்ய வேண்டியுள்ளது தயவு செய்து கீழ்கண்ட கைபேசி எண்ணுக்கு உங்கள் விபரங்களை அனுப்பவும்.
அரவிந்தன்: +19493003936

அன்னாரின் வேண்டுகோளுக்கு இணங்கி மலர்கள், மலர் வளையங்களுக்குப் பதிலாக அவர் இருந்தகாலம் வரையில், தன்னால் யென்ற நன்கொடை செய்து வந்த சிறுவர் மற்றும் பார்வையற்ற காது கேளாத சிறுவர் காப்பகங்களுக்கு நன்கொடை வளங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

காசோலை மூலமாக Foundation for Hope என்னும் நிறுவனத்திற்கு எழுதி அனுப்பவும்.
Foundation for Hope, C/O S.Wijayachandran
228 Galloway Rd, #504,
Toronto, ONT MIE 5G6, Canada.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Mon, 22 Feb, 2021