யாழ். அராலி தெற்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், மாதகல் அம்பாள் வீதி, பிரித்தானியா லண்டன் Canning Town ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா சிவசுப்பிரமணியம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் 31வது நாள் நினைவஞ்சலி வீட்டுக்கிரியைகள் 15-03-2025 சனிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும். அதனைத் தொடர்ந்து பின்னர், ந.ப 12:30 முதல் பி.ப 03:30 மணிவரை மதிய போசன நிகழ்வு நடைபெற உள்ளது. உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் , மதிய போசனத்தில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம்.
முகவரி:
The Renewal Programme (Church),
395 High Street North,
London, E12 6PG
Time- 12.30 pm - 03.30 pm