யாழ். பெருமாள் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், நீராவியடியை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா சிவஞானசுந்தரம் அவர்கள் 24-10-2019 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தம்பியையா(தம்பிஐயா), வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தையல்நாயகி(சறோ-Saroja) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற கோவிந்தசாமி, ராஜேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவாஜினி, திருலோஜன், திருலோஜினி, சயந்தன், ஆதீபன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
திவாகரன், யாழினி, தர்மசீலன், தமயந்தி, கௌதமி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
பரமேஸ்வரி, லக்ஷ்மி, மீனாம்பாள், கிருஷ்ணமூர்த்தி, காலஞ்சென்ற கருணாமூர்த்தி, விஜயபாலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜெயவர்த்தன், நிரூபன், ஜவந்தி, வாகீஷ், பார்கவி, பைரவி, யுவன், வராகி, அகில், சக்திஸ்ரீ, சத்திஅருள் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-10-2019 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று அதனைத்தொடர்ந்து ந.ப 12:00 மணியளவில் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.