சட்டதரணி.திரு புண்ணியமூர்த்தி ஐயா அவர்கள் காலம் சென்ற எமது தந்தையாருக்கு நட்பு ரீதியாக நன்கு அறிமுகமானவர். முன்னொரு காலம் அரச அலுவலகத்தில் பணி புரிந்த காலங்களில் கொழும்பில் தாங்கள் பலர் ஒன்றாக இருந்து ஒரே இடத்தில் பணி புரிந்த கதைகள் என பல விடயங்களை எங்கள் தந்தையார் சொல்லியிருக்கின்றார். குப்பிழானை பூர்வீகமாக கொண்ட எங்கள் தந்தையார் திரு. சிவசுப்பிரமணியம் ( Former clerical officer ) அவர்கள் 1987ல் அமரத்துவமடைந்துவிட்டார். எனது தந்தையாரோடு அளவெட்டியில் உள்ள இவரது வீட்டு அலுவலகத்தில் ஒருமுறை நேரே சந்தித்து பேசும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. பொதுவாக முன்னைய காலங்களில் அரச உத்தியோகத்தவர்கள், இல்லற வாழ்வினுள் புகுந்து விட்டால், மேல் கல்வியினை தொடர்வது என்பது அவர்களுக்கு மிக சிரமமான விடயமாக இருப்பது வழமையாகும். ஆனால் சட்டதரணி புண்ணியமூர்த்தி ஐயா அவர்கள் இந்த இடத்தில் ஓர் விதிவிலக்கானவர். முழு நேர அரச உத்தியோக பணி, இல்லறம் என்ற பாரிய பொறுப்பு ஆகியவற்றின் மத்தியில் சட்ட கல்லூரி சென்று சட்டம் படித்து சட்டதரணியாகி அதில் சிறப்போடு செயல்பட்டவர். அவர் வாழ்வு இளைய சந்ததியினருக்கு ஒரு "எடுத்துக்காட்டு". (ROLE MODEL & EXEMPLAR ) . அவரின் ஆத்ம சாந்திக்கு பிராத்திப்போம்.
Heartfelt condolences to the family.May he rest in peace .