
மலர்வு
09 APR 1941
உதிர்வு
30 DEC 2022
அமரர் செல்லையா நாகநாதர்
Retired GP- லண்டன். மகப்பேறு மற்றும் பிணிதீர் மனையின் ஸ்தாபகர்- சங்கானை
வயது 81
-
09 APR 1941 - 30 DEC 2022 (81 வயது)
-
பிறந்த இடம் : சங்கானை, Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : சங்கானை, Sri Lanka கொழும்பு, Sri Lanka London, United Kingdom
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
09 APR 1941
-
30 DEC 2022

Late Selliah Naganathar
பாரா முகங்கள் ஆனோமோ! கானல் நீர் ஆனீரோ!!
சங்கை நகர் தனில் பிறந்து – மருத்துவ சித்தி தனையும் பெற்று பிணியோரக்கு நித்தமும் வைத்தியமும் ஆற்றி – பல மகத்தான சேவைகள் செய்தீரே.
மணிமாமாவின் மருமகனாய் - நீங்கள் மணியாய் பல கதைகள் சொல்வீர்கள் மணித்துளிகள் பல கடக்கும் உரையாடலை மனம் ஒரு போதும் மறப்பதில்லை.
குடும்பத்தில் மூத்தவராய் குலம் சிறக்க வந்தவரே பாசத்துடனும் நேசத்துடனும் மைத்துனராய் எமை அணைத்தீரே என்றுமே நிரப்ப முடியாத வெற்றிடம் இதுவெல்லவோ – எங்களுக்கு நீங்கா நினைவுகளுடன் நித்தமும் நினைந்து நிற்கின்றோம்.
பேருள்ளம் கொண்ட பெரியப்பாவே – உங்கள் பெயராலும் நாங்கள் பெருமை கொள்கின்றோம் பாரெல்லாம் நீங்கள் சென்ற போதும் - உங்கள் ஊரில்லம் ஒரு போதும் மறந்ததில்லை.
சொல்லொணா துயரத்தில் எமை ஆழ்த்தி விட்டு சொரக்கம் தான் சென்றீரோ
சொப்பனமாய் போனது இனி உங்கள் வருகை
சோகத்தில் தவிக்கின்றோம் அன்பு பெரியப்பாவே!!
ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டி நிற்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
உங்கள் பிரிவால் துயருறும்
கனகர் பாலசிங்கம் (மணிமாமா)
குடும்பத்தினர்.
சங்கானை.
Jeganathan Thuvarakan
பெறாமகன்
Srilanka
Sri Lanka
2 years ago
Write Tribute
Summary
-
சங்கானை, Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Sun, 08 Jan, 2023
Our deepest condolences to his family.