

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா கனகையா அவர்கள் 20-05-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், செல்லையா சின்னாச்சி தம்பதிகளின் பாசமிகு புத்திரரும், பொன்னையா சிவகாமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான சின்னத்துரை, சின்னம்மா மற்றும் வேதநாயகி, சின்னத்தம்பி(ஓய்வுநிலை ஆசிரியர்), நளாயினி(வ/ சைவப்பிரகாச மகளிர் கல்லூரி), தர்மதேவி(மு/ வேணாவில் ஸ்ரீ முருகானந்தா வித்தியாலயம்), பிரேமாதேவி, கருணாநந்தன்(அதிபர்- கிளி/ மாசார் அ.த.க பாடசாலை) விபுலானந்தன்(லண்டன்), செல்லையா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அமிர்தலிங்கம்(அதிபர்- வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலை), அமிர்தநாதன்(அதிபர்- மு/ புதுக்குடியிருப்பு ஸ்ரீ சுப்பிரமணிய வித்தியாலயம்), இராசேந்திரம்(ஓய்வுநிலை அலுவலர் புதுக்குடியிருப்பு பலநோக்கு கூட்டுறவு சங்கம்), ரவிதயனி(கிளி/ புனித அந்தோனியார் ரோ.க. வித்தியாலயம்- முரசுமோட்டை), நிர்த்திகா(லண்டன்), மேகலா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கம்சியா(லண்டன்), சியாமினி(சாமந்தி கலைப்பீடம் 2ம் வருடம் யாழ் பல்கலைக்கழகம்), அனுசூயன்(பொறியியலாளர்), விதுஷணன், டிலக்சனா, பிரவீன்(மருத்துவபீடம் 4ம் வருடம் யாழ் பல்கலைக்கழகம்), தேனுயன், நிகாரா(புதுக்குடியிருப்பு மத்தியகல்லூரி), அபிசிகா, தாருகானன்(கிளிநொச்சி ம.வி), ஆத்மீகன்(லண்டன்), ஆதீசன்(லண்டன்), அபிஷா(லண்டன்), வர்ஜிகன்(லண்டன்), வர்சனா(லண்டன்), மதன்(லண்டன்), தவயோகன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும்,
கியோரா(லண்டன்), அனீஸ்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-05-2019 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைப்பெற்று பின்னர் புதுக்குடியிருப்பு மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யபடும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.