

யாழ். நீர்வேலி தெற்கைப் பிறப்பிடமாகவும், கோப்பாய் வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை வேலாயுதபிள்ளை அவர்கள் 27-01-2020 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சீனிவாசகம் செல்லத்துரை இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் இரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வேலாயுதபிள்ளை பத்மாஜினி அவர்களின் பாசமிகு கணவரும்,
ரேணுகா, ரஞ்சினி, உஷா(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பாலமோகன் அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற செல்லத்துரை செல்வரட்ணம், சிவஞானம் சின்னம்மா, செல்லத்துரை வேலுப்பிள்ளை(கனடா), திருச்செல்வம் செல்வராணி, காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம், செல்லத்துரை அரியநாயகம்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அருளாந்தம்(கனடா), நித்தியானந்தன்(கோப்பாய்), கிருபானந்தம்(கனடா), ஜெயனந்தன்(ஜெர்மனி), புஸ்பராணி(அக்கராயன் குளம்), தெய்வராணி(கோப்பாய்), இந்திராணி(ஜெர்மனி), சுகந்தினி(கோப்பாய்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நவீனன், நவீனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-01-2020 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணி முதல் ந.ப 12:00 மணியளவில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.