

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம் சங்கத்தேனியைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்லத்துரை தேவகரன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் சிகரமே
வாழ்வின் ஒளிவிளக்கே
எம் குடும்பத்தலைவனே!
எம் வாழ்வின் வழிகாட்டிய தீபமே!
கண் முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும் எங்கள் முன்னே
உங்கள் முகம் என்றும் உயிர் வாழும்
எங்கள் இதயமதில் இறுதி வரை
நிலைத்து நிற்கும் ஐயா
நீ இறையடி எய்து பத்தாண்டு
நம்ப மனம் மறுக்கிறது
இதயமெல்லாம் வலிக்கிறது
வேரற்ற மரமாய் வேதனையில் துடிக்கிறோம்
ஏன் மறைந்தாய்? எங்கள் விடிவெள்ளியே!
கடமைகள் நிறைவு கண்டு – இன்று
காலமோ பத்தாண்டு ஆனது – என்று
போறது கதி தான் மோட்சம்
பெற்றது நீங்கள் எனினும்
பாசத்தில் பரிதவித்தோம்
ஆறுதலை இனி யார் தருவார்
என்றும் உன் நினைவுகள் சுமந்து
உன் வழியில் உன் பிள்ளைகள் நாம்
என்றும் பயணிப்போம்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
We never forget your kindness. We miss you.