Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
மலர்வு 17 JUN 1937
உதிர்வு 09 JUL 2014
அமரர் செல்லத்துரை சிவசுப்ரமணியம்
வயது 77
அமரர் செல்லத்துரை சிவசுப்ரமணியம் 1937 - 2014 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை சிவசுப்ரமணியம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி:- 18-06-2024

அப்பா!...
ஆண்டுகள் பத்தைக் கடக்கின்றது...
உங்கள் நினைவுகள் நெருங்கியே வருகின்றது
உங்கள் நினைவு நாட்கள் மட்டுமே நீனைவுட்டுகின்றது
நீங்கள் மரித்துப்போனதை!...

நாட்கள் தினம் நகர்ந்து போகும்
காணியாற்றில் நீங்கள் நட்ட மரம்கூட
ஒருநாள் பட்டுப்போகும்
எங்கள் இளமையும் முதுமையாய்
வளர்ந்து போகும் ஆனால்....

உங்கள் நினைவுகள் மட்டும் எப்போதும் எங்களில்
இளமையாய் செழித்திருக்கும்...
என் நினைவில் நிற்கும் முதல் பதிவே
உங்களின் தோழ்மீது அமர்ந்து
காணியாற்று விளையை உற்றுநோக்கியது தான்
இப்போதும் அதே தோழ்களில் அமர்ந்தே
உலகை வலம் வருவதாய் உணர்கின்றேன்.

ஓம் சாந்தி!...ஓம் சாந்தி!... ஓம் சாந்தி...

உங்கள் பிரிவால் வாடும் மனைவி- சிவசுப்பிரமணியம் சந்தானலஷ்மி(கனடா), மகள்- சாந்திதேவி(பவா), ஜெயராட்ராஜ் குடும்பம், பேரப்பிள்ளை- ஜெயரூபி(கனடா), அருள்ராஜ் குடும்பம், பூட்டப்பிள்ளைகள், மகன்- சிறிசந்திரமோகன்(மோகன்-கனடா), மகேஸ்வரி குடும்பம், பேரப்பிள்ளைகள், மகள்- சசிதேவி(ராஜி-சுவிஸ்), குணசேகரம் (சேகர்) குடும்பம், பேரப்பிள்ளைகள், மகன்- சதீஸ்வரன்(ஈசன்-கனடா), துஷிக்கா குடும்பம், பேரப்பிள்ளைகள், செல்ல மகன்- சுதாகரன்(சுதன்-கனடா), குணசாந்தி பேரப்பிள்ளைகள், சகோதரி- அமரர் இராசலஷ்மி மயில்வாகனம் குடும்பம், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள், தம்பி- அமரர் செல்வ நாயகம்(செல்வம்), மககேஸ்வரி குடும்பம், பெறாமக்கள் பேரப்பிள்ளைகள் பூட்டப்பிள்ளைகள், தம்பி நாகராசா நேசமணி குடும்பம் பெறாமக்கள் பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள், சகோதரி- அமரர் நேசமலர் இஜேசுரட்ணம், தம்பி- சண்முகலிங்கம்(சனி), கமலாதேவி குடும்பம், பெறாமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள், சுஜேந்தி, பிள்ளைகள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரையும் காலத்தால் மறக்கமுமுடியாத எமது காவிய குடும்ப தலைவரின் ஆத்மா சந்தியடைய இறைவனை பிரார்த்தனை செய்கிறோம்.

தகவல்: குடும்பத்தினர் : சிவசுப்பிரமணியம் சந்தானலஷ்மி(கனடா),மகள்- சாந்திதேவி(பவா), பேத்தி- ரூபி(கனடா), மகன்- மோகன், ஈசன்,சுதன்(கனடா), மகள்- ராஜி(சுவிஸ்)

Photos

No Photos

Notices