யாழ். சின்னப்பா வீதி, நவாலி கிழக்கு, மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்லத்துரை செல்வமனோகரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்காத நினைவுகள் தந்து நீண்ட தூரம் சென்று
ஓராண்டு வந்து விட்டதே நம்பவே முடியவில்லையே
எங்கள் அன்பு தெய்வமே!
நீங்கள் இவ்வுலகை விட்டு பிரிந்ததை அறிந்து எம்
மனங்கள் சுக்கு நூறாக உடைந்தது எத்தனை
ஆண்டுகள் கடந்தாலும் நீங்கள் இல்லாத எங்கள்
வாழ்க்கை எப்போதும் முழுமையானதாக இருக்காது!
மண்ணில் மதிப்போடு மலர்ந்திட்ட பொன்மகனே
நீ விண்ணில் கலந்திட்ட நாள் முதலாய் எம் விழிகள்
உறங்கிட மறுக்குது!
உன் உதவிபுரியும் எண்ணங்களும்
நீ உயிர்களிடத்தில் காட்டிய அன்பும்
அன்று உன்னை காக்கவில்லையே!
உன்னை நினைத்தாலே தனிமையில்
கொடுமை வாட்டுதையா, கண்ணீரும் போகுதில்லை
பழகியவர்களின் மனதில் நல்ல இடத்தை பிடித்தவர் நீங்கள்!
வரமிருந்து கேட்டாலும் வாழ்க்கையிலே உங்களைப்போல்
தரமான மனிதன் தரணியிலே
யார் பெறுவார் மனோ என்னும்
எங்கள் அன்பு தெய்வமே!