Clicky

பிறப்பு 26 MAR 1969
இறப்பு 03 FEB 2026
திரு செல்லத்துரை இரட்ணகுமாரன் (குமார்)
வயது 56
திரு செல்லத்துரை இரட்ணகுமாரன் 1969 - 2026 சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Sellathurai Ratnakumaran
1969 - 2026

சித்தன்கேணியில் இரத்தினங்களின் அரசனாய் செல்லத்துரை பாக்கியம் தம்பதிக​ளின் கனிஸ்ட குமாரனாய் அவனி உதித்து சுகுமாரன், சுசீலா, சந்திரவதனா, விஜயகுமாரன், கோகுலவதனி ஆகிய​ உடன் பிறப்புக்களுடன் கூடி விளையாடி, உண்டு களித்து. பிரபாவதி, ஆனந்தராஜா, யோகராஜா, அன்னபாக்கியம், ரகுராஸ் ஆகிய​ மைத்துனிகள், மைத்துனர்களுடன் குழாவி மகிழ்ந்து வரும் வேளையில் நம் நாட்டின் தளம்பல் சூழ்நிலையால் இங்கிலாந்து சென்று வசித்து வரும் நாளில் உம் இல்லறத்தில் காதலொருத்தி அம்பிகை(கா)யைக் கைத்தலம் பற்றி அனோஸ், அவினிஸ் எனும் நல் முத்துக்களைப் புதல்வர்களாய்ப் பெற்றாயே! இவ்வண்ணம் வாழ்ந்து வரும் நாளில் இலண்டன் மாநகரத்தின் கிளார்க்டன் கடல் நகரில் வாணிபத்தில் கோலோச்சினாயே! குடும்பத்தினர், நட்புக்கள், உற்றார் உறவினர் அனைவருக்கும் இல்லையெனாது உதவிகள் புரிந்தாயே வாரி வழங்குவதில் அந்த​ வள்ளல் கர்ண மகாராஜாவை விஞ்சியவனே இன்று அள்ளிக் கொடுத்த​ உம் வலிய​ கரங்கள் ஒய்வுக்காக​ துஞ்சியதேனோ உமது கோப​ முகத்தை நாம் கண்டதில்லை. உன் வசீகரப் புன்னகையால் அனைவரது நெஞ்சங்களையும் வசீகரித்தாயே!

Write Tribute