Clicky

பிறப்பு 26 MAR 1969
இறப்பு 03 FEB 2026
திரு செல்லத்துரை இரட்ணகுமாரன் (குமார்)
வயது 56
திரு செல்லத்துரை இரட்ணகுமாரன் 1969 - 2026 சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Sellathurai Ratnakumaran
1969 - 2026

எம்மில் சிலர் நீண்ட நெடிய​ வருடங்கள் உமைக்காணாமல் போன வருட கோடை காலத்தில் கனடாவிற்கு நீங்கள் வந்த​ போது கண்டு இன்புற்றோமே அது நீங்கள் மின்னல் போல் மறைவதற்கு தானோ! மின்னாமல் முழங்காமல் உமை இழந்த​ துயரச் செய்தி எம் செவிகளைத் தீண்டியதே இது உண்மையல்ல​ என யாரும் கூறி விட மாட்டார்களா என ஏங்குகின்றோம் ஐயா! தம்பி தம்பியென்று உன் சகோதரர்கள் கதறுகின்றார்களே! சித்தப்பா சித்தப்பா என்று உன் பெறா மக்களும் குட்டி மாமா குட்டி மாமா என்று உன் மருமக்களும் கூவிக் கரைகின்றோமே எம் ஓலங்களைக் கேட்டு எமை அரவணைக்க​ வேண்டிய​ நீங்களோ எங்கோ காற்றினில் கரைந்தீர்களே!

Write Tribute