யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்லதுரை பத்மநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புள்ள அப்பா!
உங்களை பிரிந்த ஒரு வருடம்
ஒரு யுகமாய்
கழிந்தது
உங்கள் நினைவொன்று
தானே
எம்மை நிழலாய் தொடர்கின்றது
எங்களை எல்லாம் தவிக்கவிட்டு
எங்கு சென்றீரோ?
எமை விட்டுப்பிரிய உங்களுக்கு
என்றும் மனம் வராதே அப்பா!
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
பாதிவழியில் வானுறைந்து
ஒரு ஆண்டு ஆனாலும் ஆறாது
உங்கள் பிரிவுத்துயர்
எங்கள் வாழ்வு
ஒளிமயமாக அமைவதற்கு
அல்லும் பகலும்
அயராது
உழைத்தீர்கள் அப்பா!
எங்களை எல்லாம் அன்பாலும்
பண்பாலும் அரவணைத்து
வழிநடத்திய
அந்த நாட்கள்
எம்மைவிட்டு நீண்டதூரம்
சென்றாலும் உங்கள்
அறிவுரைகள்,
அரவணைப்புகள்
என்றும் எங்கள்
நெஞ்சங்களில்
உயிர் வாழும் அப்பா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய என்றும்
இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
Thank you very much for all the kind messages, flowers, calls and prayers. They are truly appreciated by our family. God bless you all with health and happiness.