

-
08 AUG 1929 - 01 JUN 2020 (90 வயது)
-
பிறந்த இடம் : ஏழாலை வடக்கு, Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : பிரான்ஸ், France London, United Kingdom
யாழ். ஏழாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ், லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மனோன்மணி செல்லத்துரை அவர்கள் 01-06-2020 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற அம்பலவாணர் முத்துப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற செல்லத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான கமலாதேவி, சுசீலாதேவி மற்றும் சுலோஜனதேவி(லண்டன்), சர்வேஸ்வரன்(பிரான்ஸ்), சிவாஜி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான புண்ணியமூர்த்தி(புண்ணியம் கடை- ஏழாலை), குலமணி(இளைப்பாறிய ஆசிரியர்- அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை), தம்பி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவலிங்கம்(பிரான்ஸ்), விஜயரட்ணம்(லண்டன்), பொன்ராசா(இலங்கை) ஜெயராணி(பிரான்ஸ்), பிரேமாவதி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சிவரூபன், விஜயதர்ஷன், தர்ஷினி, ஜெயந்தினி, தாரணி, கேதாரன், தயாபரி ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
சுதர்சன், சுகிர்தன், நிஷா, சிவனுஜன், அபிநயா, வெற்றி, புகழ், துளசி, நூர்ஜஹான், தேவலோஜன், ராஜேஷ்கண்ணா, பிரியா, லோரன்ற் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,
ஹரணி, ஸ்ருதி, திவ்யா, ஸ்ரேயா, கௌதம், ஆதித்யா, சச்சின் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தாய்மையின் தாற்பரிய முத்து
இரங்கல் கீர்த்தனை
அம்மா! அம்மா! அம்மா!
தாயே! தாயே! தாயே!
அம்மா! அம்மா! அம்மா!
தாயே! தாயே! நலமா?
அன்பின் தாயே நலமா? ஆருயிர் தாயே நலமா?
அறிவின் சிகரமே நலமா? ஆற்றலின் வெளிப்பாடே நலமா?
இயற்கையின் ஆதரவே! ஈழத்தின் தாய்மையே !
இனிமையின் ஊற்றே!
ஈட்டலின் ஆற்றலே!
உண்மையின் உயர்வே! ஊக்கத்தின் தராதரமே!
உத்தமகுண வாழ்வே! ஊன்றுகோலின் பிறப்பிடமே!
எண்ணித் துணிதலின் ஆக்கமே!
ஏற்றத்தின் ஏணிப்படியே!
என்றும் நம் வாழ்வின்,
ஏகாந்த தாயே!
அம்மா! அம்மா! அம்மா!
தாயே! தாயே! தாயே!
அம்மா! அம்மா! அம்மா!
தாயே! தாயே! நலமா?
ஐக்கியத்தின் உறவே!
ஆழ்மனதின் அடித்தளமே!
ஐம்புலன்களின் ஆற்றலே!
ஆக்கத்தின் சிறப்பே!
ஒழுக்கத்தின் மேன்மையே! நல் ஓதலின் பிறப்பிடமே!
ஒற்றுமையின் திருவுருவே!
ஓங்கார தத்துவமே!
ஆதி அந்த வாழ்வின்,
அரும்பெரும் காப்பியமே!
அன்பொடு கூடிய மன ஆருயிரின் தாயே!
அமைதியுடன் உறங்கிடுவாய் மன
அமைதியுடன் உறங்கிடுவாய்!
அமைதியுடன் உறங்கிடுவாய்!
நல் மன
அமைதியுடன் உறங்கிடுவாய்!
அம்மா! அம்மா! அம்மா!
தாயே! தாயே! தாயே!
அம்மா! அம்மா! அம்மா! தாயே! தாயே! நலமா?
அன்பு மகள் கிளி
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
ஏழாலை வடக்கு, Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )

Deepest Condolences to the Family, Relatives and Friends.