5ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் செல்லத்துரை மகாதேவா
சுன்னாகம் பலநோக்கு கூட்டுறவுச்சங்க முன்னாள் முகாமையாளர்
வயது 73
Tribute
0
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கந்தரோடையை பிறப்பிடமாகவும், கந்தரோடை பன்னாலையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்லத்துரை மகாதேவா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:28/11/2022.
அனுதினமும் அகம் விட்டகலா
நினைவின் வண்ணங்கள்
ஆண்டுகள் ஐந்து அகன்றாலும்
அகலாத எம் எண்ணங்கள்
ஆண்டுகள் நீளலாம் ஆனால் உங்கள்
நினைவுகள் நீங்காது எங்களுக்கு
பெருமை சேர்த்த எம் அப்பாவே
உங்கள் சிறப்பினால் நாம் எல்லோரும்
பெருமை அடைந்தோம்!
இன்று நீங்கள் எம்மோடு இல்லை
ஆனாலும் நீங்கள் காட்டிய
பாதையில் தான் பயணிக்கின்றோம்
அப்பா! புன்னகை புரியும்
உங்கள் முகம் தேடி வேதனையில்
ஏங்கித் தவிக்கிறோம்
நொடிப் பொழுதில் - எமை
வருந்த விட்டுச் சென்றுவிட்டீர்!
வருடங்கள் நீளலாம் - ஆனால் உன்
நினைவுகள் என்றும் நீங்காது!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute