யாழ். அளவெட்டி தெற்கு கும்பழாவளை பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி தெற்கை வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை கணபதிப்பிள்ளை அவர்கள் 31-07-2019 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை நாகம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை அன்னபாக்கியம் தம்பதிகளின் மூத்த மருமகனும்,
புவனேஸ்வரி(ஓய்வுநிலை அதிபர்- யா/அச்சுவேலி மத்திய கல்லூரி) அவர்களின் அன்புக் கணவரும்,
செந்தில்குமரன்(விரிவுரையாளர்- கோப்பாய் ஆசிரியர் கலாசாலை, முன்னாள் வவுனியா தேசிய கல்வியியற்கல்லூரி), செந்தில்வேலன்(பொறியியலாளர்- கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுகந்தினி(அதிபர்- விவசாயக்கல்லூரி, பரந்தன்), கார்த்திகா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜெயப்பிரியா(யாழ். பல்கலைக்கழகம்), பிரேமி(யா/வேம்படி மகளிர் உயர்தரப்பாடசாலை), சாரங்கன்(வேட்டலூ பல்கலைக்கழகம், கனடா), கெளதமன்(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 02-08-2019 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் முழக்கன் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
Dear Mrs. Kamapathipillai, Senthilkumaran & Senthilvelan, Please accept my heartfelt condolence at this difficult time. May his soul Rest in Peace with divine. - Suthan