Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 27 APR 1955
இறப்பு 15 JUN 2025
திரு செல்லத்துரை கமலநாதன்
ஓய்வுபெற்ற ஆசிரியர்
வயது 70
திரு செல்லத்துரை கமலநாதன் 1955 - 2025 வேலணை மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை கமலநாதன் அவர்கள் 15-06-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சண்முகராஜா மற்றும் எழுபங்கநாச்சியார்(கனடா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுலோசனா அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான பாலச்சந்திரன்(முன்னாள் பீடாதிபதி கலைப்பீடம், யாழ்.பல்கலைக்கழகம்), இராமச்சந்திரன் மற்றும் சிவயோகம்(கெளசல்யா- ஜேர்மனி), செல்வநாயகி(டென்மார்க்) ஆகியோரின் அன்புத் தம்பியும்,

கவாஸ்கர்(கணக்காளர்- Auto Motive Pvt Ltd, கொழும்பு), சுபாஸ்கர்(பிரான்ஸ்), சபீஸ்கர்(பிரித்தானியா), நிவாஸ்கர்(இயக்குனர்- UPR Courier Service Pvt Ltd, கொழும்பு) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

லோககீதா(விரிவுரையாளர், தேசிய கல்வி நிறுவகம், கொழும்பு), சுஜிதா(பிரான்ஸ்), ரதினா(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

ஆர்ஜித்(பிரான்ஸ்), ஆரவ்யா(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு அப்பப்பாவும்,

சத்தியலட்சுமி(அவுஸ்திரேலியா), நிர்மலாதேவி(ஜேர்மனி), காலஞ்சென்ற நவரத்தினம் மற்றும் கேதாரநாதன்(குமரன் - டென்மார்க்), இராஜபூபதி(பிரித்தானியா), காலஞ்சென்ற பாலகுமார் மற்றும் கலாதேவி(கொழும்பு), சந்திரவதனி(வரக்காப்பொலை), ஆனந்தன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கந்தவேல்(பிரான்ஸ்), புஷ்பமலர்(பிரித்தானியா), கலைச்செல்வி(கனடா), காலஞ்சென்றவர்களான வரதராஜா, வரதலிங்கம், தவபாக்கியம் ஆகியோரின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரரும்,

கனீந்திரன்(கொழும்பு), குலச்செல்வம்(வரக்காப்பொலை) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 19-06-2025 வியாழக்கிழமை அன்று பி.ப 01.00 மணியளவில் இல.92, சென்.மேரி வீதி, மட்டக்குளி எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03.00 மணியளவில் மாதம்பிட்டிய இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

வீட்டு முகவரி:
இல 92, St.Mary’s road,
Colombo 15.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கவாஸ்கர் - மகன்
நிவாஸ்கர் - மகன்

Photos

Notices