Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 18 APR 1928
இறப்பு 14 JUN 2016
அமரர் செல்லத்துரை குணரெட்ணம்
வயது 88
அமரர் செல்லத்துரை குணரெட்ணம் 1928 - 2016 புங்குடுதீவு, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், யாழ். கந்தர்மடம், அவுஸ்திரேலியா Sydney ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த  செல்லத்துரை குணரெட்ணம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி. 

அன்பின் உறைவிடமே ஆனந்தத்தின் மறுவடிவே
பாசத்திலும் பண்பிலும் இனியவரே
எங்கள் அன்புக் குலவிளக்கே
பாசத்துடன் நடமாடிய தெய்வமே

எங்களை ஆறாத்துயரில் ஆழ்த்தி விட்டுச்சென்று
ஐந்து ஆண்டுகள் ஆனதுவோ
எத்தனை ஆண்டு காலம் சென்றாலும்
எங்கள் மனத்தை விட்டு அகலமாட்டீர்கள்
நீங்கள் எமக்குள்ளே வாழ்கின்றீர்கள்
அனுதினமும் தொழுகின்றோம்

நீங்கள் விண்ணுலகில் வாழ்ந்தாலும்
மனதாலும் நினைவாலும் தினம் தினம் துதிக்கின்றோம்
காலங்கள் விடைபெறலாம் கண் முன்னே நிழலாடும்
உங்கள் உருவம் எம் இதயத்தில்
கலந்து நிலைத்திருக்கும்
எங்கள் அன்பின் திருஉருவே  

உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.. 


தகவல்: குடும்பத்தினர்