

யாழ். கொய்யாத்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் noisiel ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்லத்துரை அன்ரன் மரினோ அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பினில் விளைந்த
ஆரமுதே
அளவிலா
இன்பப் பெரும் சுடரே
ஆனந்தமாய் உள்ளங்கள்
கவர்ந்த உத்தமரே
அற்புத
மனிதரின் மாணிக்கமே
தொலை தூரம் சென்ற போதும்
தொலையாதது உமது நினைவுகள்
தொடு வானம் போல் தொடரும்
கனவுகள்
தோழமையாய்
திகழும் நற்சந்தங்கள்
நம்மை விட்டகன்று நாட்கள்
பலவாயிற்று
நானிலமும் ஏங்குதே
நல்ல குணவாளனுக்காய்
நாட்கள்
மாதங்களாய் அகவையும் ஒன்றாயிற்று
நல்லவரே வானவரே நற்பதவி கண்டீரே
சீரும் சிறப்புமாய் நீர் இருந்த
நாட்கள்
சிந்தாமல் சிதையாமல்
கதை கவிதை சொல்லுதே
சித்திரமே
உம்தோற்றம் சிந்தையிலே சிகரம் ஐயா
சீரோடு சிறப்பாக நீர் சிவனிடத்தில் இளைப்பாறும்
ஆண்டு கடந்தாலும் ஆறாத துயரத்தில்
மீளாது தவிக்கும் அன்பான குடும்பத்தினர்,
உற்றார், உறவினர், நண்பர்கள்.