8ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் செல்லத்துரை கிருஷ்ணர்
(முன்னாள் கணக்களார்- இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்)
வயது 87
Tribute
1
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு பம்பலபிட்டி, கனடா Markham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்லத்துரை கிருஷ்ணர் அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்கள் இந்த உலகை விட்டு சென்று
எட்டு வருடங்கள் ஓடி விட்டது அப்பப்பா
ஆயிரம் தெய்வங்கள் கண்முன்னே தோன்றும்- நீங்கள்
எம்மில் காட்டிய அன்பில்
தெய்வங்கள் ஏதும் இல்லையென்றானது- நீங்கள்
எம்மை விட்டுச் சென்ற பின்னே
இதுவரை எம்மை வழிநடத்தி இன்று- பாதி
வழியில் விட்டுச் சென்று - எமை
திக்கற்று திணறவிட்டதேனோ
நாட்கள் வாரமாகி
வாரங்கள் மாதமாகி
மாதங்கள் ஆண்டாகி போனாலும்
ஆறவில்லை எங்கள் துயரம்
மறுபிறவி உண்மை என்றால்- நீங்கள்
மறுபடியும் பிறக்க வேண்டும் என
மனமெல்லாம் ஏங்குதப்பப்பா - எங்கள்
நினைவெல்லாம் தான் நீங்கள் அப்பப்பா
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
பாலச்சந்திரன் றணுஷன் - பேரப்பிள்ளை (பிரான்ஸ் )