

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் கண்ணகைபுரத்தைப் பிறப்பிடமாகவும், பொன்னாந்தோட்டத்தை வதிவிடமாவும், சுவிஸ் Canton Schwyz ஐ தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்லத்தம்பி வரதராஜன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 23-04-2025
ஆண்டுகள் பத்து சென்றாலும்
உங்களை இழந்த துன்பமும் துயரமும்
எங்கள் மனதை விட்டு மறையவில்லையே!!
உள்ளத்தில் பல கனவு ஒன்றாக நாமும் கண்டோம்
கனவெல்லாம் நனவாகும் காலம் வருமுன்னே
கண்மூடி மறைவாய் என்று
கனவிலும் நினைக்கவில்லை!
அன்பின் அடையாளச் சின்னம்
அரவணைப்பின் அழகு நிறை உதாரணம்
அணுவளவும் கலப்படமில்லா ஆழ்ந்த அன்பு....... !!
வெற்றிகளை மட்டுமே எமதாக்கிய விவேகம்.!
வாழ்க்கை முழுவதுமே எமக்கான அர்பணிப்பு...!
அன்பு தொடங்கி அர்பணிப்பு வரை
'அப்பா' என்பதில் அடங்கி விட்டது.....!!!
காலத்தின் சக்கரங்கள் கடுகதியில் சென்றாலும்
கடந்து வந்த பாதையிலே நினைவலைகள் தொடரட்டும்
அல்லும் பகலும் ஓயாது உழைத்ததனால்
அமைதியில் ஓய்வெடுக்க இறைவனடி சென்றீரோ
கண்முன்னே வாழ்ந்த காலம் கனவாகிப் போனாலும்
எம்முன்னே உங்கள் முகம்எந்நாளும் உயிர் வாழும் அப்பா!
என்றென்றும் உங்கள் நினைவுகளோடு
வாழ்ந்து கொண்டிருக்கும் குடும்பத்தினர்.!!